உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா...

திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா...

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வருகிறார். நடிப்பு தாண்டி இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக உள்ளார். இவருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் தனது மகன்களுடன் திருப்பதியில் பெருமாளை வழிபாடு செய்தார். உடன் அவரது குடும்பத்தினரான அப்பா, அம்மா, சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்தனர். தனுஷின் 55வது பட அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இதை தனுஷும் இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளாராம். இதை தனுஷ் இயக்கி, தயாரிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இதுபற்றி விசாரித்தபோது, இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. தனுஷ் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்றனர். அதேசமயம் யாத்ரா நடிப்பு, நடனம் போன்ற சினிமா சார்ந்த விஷயங்களை கற்று வருகிறாராம். இன்னும் ஓரிரு ஆண்டுகள் கழித்து மகனை களமிறக்கலாம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

தியாகு, கன்னியாகுமரி
2026-01-29 21:41:21

தனுஷ் மகனை பார்த்தால் முக தோற்றம் தனுஷ் தம்பி மாதிரி இருக்கு. ஒரு தனுஷையே நம்மால் சகிக்க முடியல, இதில் இன்னொன்றா. விளங்கிடும் டுமிழ்நாடு சினிமாக்களின் எதிர்காலம்.


தியாகு, கன்னியாகுமரி
2026-01-29 18:17:48

தனுஷ் படங்களே கொலை, கொள்ளை, ரத்தம், கஞ்சா, ஜெயில், கட்ட பஞ்சாயத்து, நாடக காதல், கேவலமான வசனங்கள், ஓவர் பில்ட் அப், மிதிச்சிட்டாங்க, அமுக்கிட்டாங்க, பிழிஞ்சிட்டாங்க, வேலையில்லாமல் பணக்கார மற்றும் அழகான பெண்களை காதலிப்பது என்று காண சகிக்காது. இதில் அவர் மகனும் நடிச்சா...விளங்கிடும் டுமிழ்நாட்டு சினிமாக்களின் எதிர்காலம்.