சமந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாகுந்தலம்!
ADDED : 910 days ago
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன், அல்லு அர்ஹா ஆகியோர் நடிப்பில் உருவான படம் சாகுந்தலம். சரித்திர கதையில் உருவான இந்த படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நான்கு மொழிகளில் வெளியாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த படம் முதல் நாள் ஐந்து கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் 1.5 கோடி மட்டுமே வசூலித்து படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இப்படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருவதே வசூல் குறைந்து விட்டதற்கு காரணம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.