திடீரென்று ஒல்லிகுச்சியாக மாறிய மாளவிகா மோகனன்
ADDED : 947 days ago
தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் அதன் பிறகு மாஸ்டர், மாறன் படங்களில் நடித்தார். தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கிளாமர் ஹீரோயினாக இல்லாமல் ஒரு மாறுபட்டவேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக சிலம்பம் உள்ளிட்ட சில தற்காப்பு கலைகளை பயிற்சி எடுத்து நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் அப்போது தனது கிளாமர் போட்டோ சூட் நடத்தி அவற்றை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை வாங்கி குவித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உடல் எடை குறைத்து ஒல்லிக்குச்சியாக மாறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.