உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்

நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில்(93) உடல்நலக் குறைவால் கொச்சியில் காலமானார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி. மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். இன்றைக்கு உள்ள முன்னணி நடிகர்களுக்கு சமமாக தொடர்ந்து ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவரது அம்மா பாத்திமா. மம்முட்டி உடன் வசித்து வந்தார். வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று(ஏப்., 21) அதிகாலை காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 3 மணியளவில் கோட்டயத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடக்கிறது.

மம்முட்டியின் தாயாரின் மறைவிற்கு மலையாள உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !