'ஆதிபுருஷ்': சீதை லுக் வெளியீடு
ADDED : 885 days ago
ராமாயணத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம், 'ஆதிபுருஷ்'. ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் ஜூன் 16ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சீதையாக நடித்துள்ள கீர்த்தி சனோன் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.