உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோவில் இணைந்த விக்ரம் பட நடிகர்!

லியோவில் இணைந்த விக்ரம் பட நடிகர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். இந்த படத்தில் 'பாவக் கதைகள்' வெப் சீரிஸ் மூலம் அறிமுகமான ஜாபர் சாதிக் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு விக்ரம் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்-ல் இணையும் என ரசிகர்கள் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !