பெண்கள் உடலை மறைப்பது அவர்களுக்கு நல்லது - சல்மான்
ADDED : 970 days ago
பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவர் நடிகர் சல்மான் கான். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் கிஸி கி ஜான் கிஸி கா பாய் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.
சமீபத்தில் சல்மான் கான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில், பெண்களின் உடல் மிகவும் மதிப்புமிக்கது. அதனை எவ்வளவு மறைக்கிறார்களோ அவர்களுக்கு அவ்வளவு நல்லது. நான் பெண்களை குறை கூறவில்லை. இங்கே பிரச்னை ஆண்களிடம் உள்ளது. பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வை சரியில்லை . எனக்கு அப்படிப்பட்டவர்களை பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.
இப்போது இணையத்தில் இந்த கருத்து வைரலாகி வருகிறது.