லியோ படத்தை பற்றி பகிர்ந்த மிஷ்கின்
ADDED : 898 days ago
விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஷ்கின் லியோ படத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, லியோ திரைப்படம் அருமையாக வந்துள்ளது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது வரை அவர் மாறவில்லை. இன்னும் அதே அன்பு உள்ளது. விஜய், லோகேஷ் இணைந்தால் அது அதிரடியான ஆக்ஷன் படமாக தான் அமையும் என தெரிவித்துள்ளார்.