மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
883 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
883 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
883 days ago
சினிமா பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போதும், வெளியூர் பயணங்களை மேற்கொள்ள விமான நிலையம் செல்லும்போதும், ரசிகர்கள் சம்பந்தப்பட்ட பிரபலங்களின் அனுமதியை கேட்காமலேயே அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்று நடிகர் சிவகுமாரின் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயன்றபோது அவரது செல்போனை சிவகுமார் தட்டிவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல நடிகர் மம்முட்டி ஒரு முறை பிரார்த்தனை செய்வதற்காக மசூதிக்குள் நுழைந்தபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக்கொண்டு, தொழுகை முடிந்த பின்னர் அவர்களிடம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பினார். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞனின் செல்போனை பறித்து தூக்கி இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
தற்போது லேட்டஸ்டாக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த நடிகர் ஷாருக்கானுடன் அவரது அனுமதி இன்றி ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயற்சிப்பதும் நடிகர் ஷாருக்கான் போகிற போக்கில் அந்த இளைஞரின் கையை தட்டி விடும் விதமாக அந்த பக்கம் தள்ளி விடுகின்ற வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல சிலர் ஷாருக்கானை விமர்சித்தாலும் பெரும்பாலாக நெட்டிசன்கள் எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் அவர்களது அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க முயற்சிப்பது தவறான விஷயம் என்று ஷாருக்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
883 days ago
883 days ago
883 days ago