மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
883 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
883 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
883 days ago
மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். அதில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகள், பணிக்கு செல்லும் இளம் பெண்களை மூளை சலவை செய்து அவர்களை முஸ்லீமாக்கி ஆப்கானிஸ்தான், சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்து விடுவதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து மட்டும் 32 ஆயிரம் பெண்கள் அவ்வாறு சேர்க்கப்பட்டிருப்பதாக இந்த படத்தின் டீசரில் தெரிவிக்கப்பட்டது. அது முதல் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் மத்திய தணிக்கை குழு, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி விட்டதால் படத்தை நாளை (மே 5) வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. கேரளாவில் படத்தை திரையிட கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் படத்தை தடை செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் இந்த படத்தை திரையிட்டால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசுக்கு மாநில உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மாநில உளவுத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் இந்த திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த திரைப்படத்தை திரையிடாமல் இருப்பது நல்லது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மற்ற மொழிகளில் இந்த படம் வெளியாகும்போது அந்த மாநிலங்களில் நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு திரைத்துறையினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்திலும் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
883 days ago
883 days ago
883 days ago