300 கோடியைக் கடந்த 6வது படம் 'பொன்னியின் செல்வன் 2'
சினிமா உலகில் 100 கோடி வசூல் என்பதுதான் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு 'டார்கெட்' ஆக இருந்தது. அது இப்போது 1000 கோடி வசூல் என மாறிவிட்டது. 'பாகுபலி 2, டங்கல், கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் அப்படி 1000 கோடி வசூலித்ததே அதற்குக் காரணம்.
கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 1' 500 கோடி வசூலையும், 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும் கடந்தது. 300 கோடி வசூலைக் கடந்த படங்களாக 'பிகில், வாரிசு' ஆகிய படங்கள் உள்ளன. 'பொன்னியின் செல்வன் 2' படமும் தற்போது 300 கோடி வசூலைக் கடந்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இவற்றில் சில படங்களின் வசூல்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. சில பாக்ஸ் ஆபீஸ்ட் வட்டாரத் தகவல் மட்டுமே.
'பொன்னியின் செல்வன் 2' கடந்த வருடம் வெளிவந்த முதல் பாகத்தின் வசூலான 500 கோடியைக் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.