கங்குவா படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சூர்யா
ADDED : 888 days ago
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதில் சரித்திர கால கெட்டப்பில் நடிக்கும் சூர்யா தற்போது ஜிம்மில் தீவிர ஒர்க் அவுட்டில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சரித்திர கால கெட்டப்புக்காக தனது உடல் எடையை ஏற்றி பிட்டாக மாறி இருக்கிறார் சூர்யா. கங்குவா படத்தின் கதாபாத்திரத்துக்காக ஜிம்மில் முழுமையாக தன்னை சூர்யா தயார்படுத்தி வரும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.