இந்தியன் 2 : பாபி சிம்ஹா சொன்ன சுவாரஸ்ய தகவல்
ADDED : 879 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீர்த் சிங், விவேக், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்தியன் 2 குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்தியன் தாத்தா நமக்கு சூப்பர் ஹீரோ மாதிரி. இப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. 100 சதவீதம் உறுதியாக சொல்கிறேன். விவேக் காட்சிகள் படத்தில் எதும் நீக்கவில்லை. அதேபோல், இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத விவேக் படத்தில் காண்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.