ரஜினிக்கும் வில்லியாக நடிப்பேன் - வரலட்சுமி
ADDED : 874 days ago
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'. இப்படம் வரும் 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்பட விழாவில் பேசிய வரலட்சுமி, ‛‛இந்தப்படத்தில் நிச்சயம் கதை இருக்கும். இந்த கதையை கேட்கும்போதே திரில்லராக இருந்தது. எங்கள் படத்தில் நல்ல கதை இருக்கிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு நடிகை. எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். ஹீரோயின், வில்லி, கேரக்டர் ரோல் என எதுவாக இருந்தாலும் என்னால் அந்த வேடத்திற்கு கண்டிப்பாக சிறப்பு சேர்க்க முடியும். வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கும் வில்லியாக நடிப்பேன்'' என்றார்.