உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குட் நியூஸ் சொன்ன சந்திரலேகா சீரியல் நடிகை

குட் நியூஸ் சொன்ன சந்திரலேகா சீரியல் நடிகை

சினிமாவிலிருந்து வந்து சின்னத்திரையில் புகழ் பெற்றவர் நடிகை ஸ்வேதா பண்டேகர். அதிக எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த சந்திரலேகா தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே தனது காதலர் மால்மருகனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஸ்வேதாவுக்கும், மால்மருகனுக்கு கடந்த டிசம்பரில் கோலாகலமாக திருமணம் முடிந்தது. இந்நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை போட்டோஷூட் புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை சொன்ன ஸ்வேதா-மால்மருகன் ஜோடிக்கு ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !