மீண்டும் வருகிறார் ராகவன் : வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ்
ADDED : 870 days ago
கடந்த 2006ம் ஆண்டில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. ஜோதிகா, கமலானி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவந்த் சேனல் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ராகவன் கேரக்டரில் நடித்திருந்தார் கமல். இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் தமிழகம் முழுக்க ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என அறிவித்து, டி.சி.பி. ராகவன் இஸ் பேக் என்று புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.