உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியின் புதிய பட அறிவிப்பு

விஜய் சேதுபதியின் புதிய பட அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் பல மொழிகளை வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(மே 19) அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமார் தயாரித்து இயக்குகிறார். இவர் இதற்கு முன்பே விஜய் சேதுபதி வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜை மலேசியாவில் உள்ள முக்கிய கோவிலில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !