'எருமை சாணி' புகழ் இயக்குனர் விஜய் திருமணம் : காதலியை மணந்தார்
ADDED : 873 days ago
‛எருமை சாணி' என்ற யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் விஜய். ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு, நான்சிரித்தால் படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அருள்நிதியை நாயகனாக வைத்து 'டி பிளாக்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் விஜய்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் தனது காதலி நட்சத்திராவை கரம் பிடித்துள்ளார். விஜய் - நட்சத்திரா திருமணம் கோவையில் உள்ள கயல் வெட்டிங் பேலஸில் நடைபெற்றது. திருமண விழாவில் ஊடகத்தை சேர்ந்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.