உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் ஸ்டார்கள் திடீர் சந்திப்பு : விடிய விடிய பேசி மகிழ்ந்தனர்

பாலிவுட் ஸ்டார்கள் திடீர் சந்திப்பு : விடிய விடிய பேசி மகிழ்ந்தனர்

தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும், விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருப்பதை போன்று பாலிவுட்டில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகிய மூவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த மூவரும் திடீரென சல்மான்கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு அதிகாலை 4 மணி வரை நடந்துள்ளது. இதில் அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளனர். அமீர்கான் தனது பிரேக்கை கைவிட்டு மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று சல்மான்கானும், ஷாருக்கானும் கேட்டுக் கொண்டுள்ளனர். மூவரும் இணைந்து ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றும், இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !