அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி
ADDED : 854 days ago
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் - மதுபாலா நடிப்பில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான படம் ஜென்டில்மேன். இந்த படத்தை தயாரித்த கே.டி. குஞ்சுமோன், 30 ஆண்டுகளுக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரிக்கிறார். இந்த படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க, சேத்தன் சீனு, புதுமுக நடிகை நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கீரவாணியை நேரில் சந்தித்து அப்படத்தின் கதையை கூறி உள்ளார் இயக்குனர் கோகுல் கிருஷ்ணா. இதையடுத்து அடுத்த மாதம் பாடல் கம்போஸிங்கை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளாராம் கீரவாணி. இது குறித்த தகவலை அப்படக்குழு வெளியிட்டுள்ளது.