ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ADDED : 868 days ago
கடந்த ஜூன் இரண்டாம் தேதி முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவான ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் திரைக்கு வந்தது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் உலக அளவில் 4.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படம் முதல் நாளில் 3.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 5.5 கோடி வசூலித்துள்ளது.
அந்த வகையில் ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை விட ஆதியின் வீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு கோடி அதிகமாக வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முந்தைய நாட்களை விட இன்று இந்த இரண்டு படங்களுமே அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.