உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்!

ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்!

நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த 2001ம் ஆண்டில் மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கதாநாயகியாக நடித்தார். ஆனால், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு கடந்த 10 ஆண்டுகளாக விலகி இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விமானம், டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமானம் படத்தின் கதையை கேட்டதும் பிடித்து போனதால் இந்த படத்தில் நடித்தேன். நான் எப்போதும் படத்தின் கதை, அதில் எனக்கு உள்ள கதாபாத்திரம் ஆகிய இரண்டு விஷயங்களை மட்டும் தான் மனதில் வைத்து தேர்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !