வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல்!
ADDED : 864 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ம் ஆண்டில் கவுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு இப்போது ஒரு மகனும் உள்ளார்.
ஆனாலும், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் காஜல். அதனால் அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாததால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், இதுபற்றி அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது; “சினிமாவில் இருந்து ஒரு போதும் நான் விலக மாட்டேன். ரசிகர்கள் மீது எனக்கு பெரும் அன்பு இருக்கிறது; அதை எளிதில் விட்டு கொடுக்க மாட்டேன் . என் தொழில், குடும்ப வாழ்க்கை இரண்டும் தனித்தனியாகவே இருக்கிறது .அது தொடரும்” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.