ஜெயிலர் : வெளிநாட்டு உரிமையை பெற்ற ஐங்கரன் இன்டர்நேஷனல்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் டப்பிங் பேசி வரும் நிலையில், லால் சலாம் படத்தில் நடித்து முடித்ததும் ரஜினிகாந்த் டப்பிங் பேச உள்ளார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை ஐங்கரன் பிலிம்ஸ் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த கட்டமாக இப்படத்தின் வெளிநாட்டு பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதை அடுத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் வியாபாரம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.