மகனுடன் சிறிய சைக்கிளை ஓட்டி விளையாடும் செல்வராகவன்!
ADDED : 868 days ago
சாணிக் காயிதம், பீஸ்ட், பகாசூரன் போன்ற படங்களில் நடித்த இயக்குனர் செல்வராகவன் தற்போது விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியவர், அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டு இருக்கிறார்.
மேலும் சமீப காலமாக டுவிட்டரில் பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் செல்வராகவன், சமீபத்தில் தனது அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினருடன் ஒரு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய புகைப்படங்களை வெளியிட்டிருந்தவர், தற்போது தனது மகனுடன் சிறிய சைக்கிளில் அமர்ந்து தானும் ஒரு குழந்தையாக மாறி அதை ஓட்டி விளையாடும் ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.