உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாரி செல்வராஜின் மாமன்னன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

மாரி செல்வராஜின் மாமன்னன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது மாமன்னன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 29ம் தேதி திரைக்கு வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இது குறித்த போஸ்டர் ஒன்றை தற்போது மாமன்னன் படக்குழு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !