கவினுக்கு ஜோடியாக இவானா? திவ்ய பாரதி?
ADDED : 847 days ago
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். டாடா படத்தின் வெற்றிக்கு பின் தற்போது இவர் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இளன் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க லவ் டூடே நாயகி இவானா மற்றும் பேச்சலர் நாயகி திவ்ய பாரதி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.