மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ரிலீஸ் எப்போது?
ADDED : 871 days ago
புதுமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நீண்ட நாட்கள் போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.