உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாமன்னன் படம் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்த கே.பாலசந்தரின் மருமகள்

மாமன்னன் படம் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்த கே.பாலசந்தரின் மருமகள்

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம். ‛வீட்ல விசேஷம்' என்ற படத்தில் ஒரு நர்ஸ் கேரக்டரில் நடித்தவர், அதையடுத்து சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள ‛மாமன்னன்' படத்தில் வடிவேலுவின் மனைவியாக வீராயி என்ற கேரக்டரில் நடித்துள்ள கீதா கைலாசம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛மாமன்னன் படத்தில் வடிவேலுவுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது பயமாக இருந்தது. அதையடுத்து ஸ்பாட்டுக்கு சென்ற போது அவருக்கு இணையாக நடிப்பது சவாலாகவும் இருந்தது. மேலும், இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் நான் நடித்த கேரக்டர்கள் பெரிதாக ரசிகர்களை போய் சேராத நிலையில், இந்த படத்தின் கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரவுடிகளுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் நான் ஒளியும் காட்சியில் சிறப்பாக நடித்ததாக பலரும் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அந்த வகையில் இந்த மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது'' என்கிறார் கீதா கைலாசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !