விஜய்யை தொடர்ந்து களத்தில் இறங்கிய விஷால்!
நடிகர் விஜய் சமீபத்தில் 10ம், பிளஸ் 2 வகுப்பில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். இதில் விஜய்யின் அரசியல் நோக்கம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் அந்த விழாவில் பேசியது மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
தற்போது விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் இதேபோல் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, விஷால் கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் பிளஸ் 2 வகுப்பு படித்து முடிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். அவரின் உதவியால் இப்போது சுமார் 300 பேர் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படித்து வருகின்றனர். விஜய்க்கு முன்பே இந்த நல்ல செயலை செய்து வரும் விஷால் விஜய் நடத்தியது போல உதவி பெறும் மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன் அழைத்து விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.அதில் விஷால் பங்கேற்று மாணவ, மாணவிகள் முன்பு பேச உள்ளார் என்கிறார்கள்.