உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை!

அருள்நிதிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து அருள்நிதி இப்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக பா.பாண்டி, ஜூங்கா படங்களில் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது இதுவரைக்கும் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !