சந்தானத்தின் கிக் படத்திற்கு யுஏ சான்று
ADDED : 822 days ago
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் கிக். இதில் அவருக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளார்கள். அர்ஜுன் ஜென்யா என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும், படம் 134 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது என்றும் படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. விரைவில் கிக் படம் திரைக்கு வர உள்ளது.