சிவகார்த்திகேயன் பட இயக்குனர் உடன் இணையும் நானி?
ADDED : 819 days ago
கடந்த 2022ம் ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கினார். முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூலித்த வெற்றி பட இயக்குனர் என பெயரும் பெற்றார். இதன் பின்னர் ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு அமைந்து ஒரு சில காரணங்களால் சிபி சக்கரவர்த்தி வெளியேறினார் என தகவல்கள் உள்ளது.
இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி ஒரு சில தெலுங்கு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்திற்கு புதிய படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக நானி நடிக்க உள்ளாராம். அடுத்த வருடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.