உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய்தரம் தேஜ் உடன் இணையும் பூஜா ஹெக்டே

சாய்தரம் தேஜ் உடன் இணையும் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே நடித்து கடைசியாகப் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் மகேஷ் பாபு நடிக்கும் குண்டூர் காரம் படத்தில் இருந்தும் பூஜா ஹெக்டே வெளியேறினார். இந்த நிலையில் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பத் நந்தி இயக்கத்தில் சாய்தரம் தேஜ் நடிக்கவுள்ள படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதை சித்தரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஒப்பந்தம் செய்ததால் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சினையால் தான்பூஜா ஹெக்டே குண்டூர் காரம் படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !