'சிட்டாடல்' படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா
ADDED : 854 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது 'சிட்டாடல்' வெப் தொடரின் இந்தியப் பதிப்பில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பை தற்போது முடித்துவிட்டதாக சமந்தா அறிவித்துள்ளார்.
'13 ஜுலை, எப்போதும் ஒரு சிறப்பான நாள். 'சிட்டாடல் இந்தியா' படப்பிடிப்பை முடித்துவிட்டேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஒரு வருட காலத்திற்கு சமந்தா எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. அவருக்கு தசை அழற்சி நோய் பாதிப்புள்ளதால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொன்டா ஜோடியாக நடித்து வரும் 'குஷி' படம் அடுத்து வெளியாக உள்ளது. அப்படத்தின் புரமோஷனிலும் சமந்தா கலந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.