உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏன் இப்படி சிரிக்கிறார் ராஷ்மிகா?

ஏன் இப்படி சிரிக்கிறார் ராஷ்மிகா?

'வாரிசு' படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, அப்படத்திற்குப் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் 'ரெயின்போ' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் 'புஷ்பா 2' படத்திலும், ஹிந்தியில் 'அனிமல்' படத்திலும் நடித்து வரும் ராஷ்மிகா தெலுங்கில் நிதின் ஜோடியாக நடித்து வரும் ஒரு படத்திலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், வாயை பொத்திக் கொண்டு சிரிக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “பொதுவாக நடந்து வரும் பல விஷயங்களுக்காக எனது ரியாக்ஷன் இது,” எனக் குறிப்பிட்டுள்ளார். நிதின் படத்திலிருந்து ராஷ்மிகா விலகியதாக சொல்லப்பட்டு வரும் செய்திகளுக்கான பதிலடி தான் அது என்றும் சொல்கிறார்கள்.

ராஷ்மிகாவின் இந்தப் பதிவிற்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் கொடுத்துள்ளனர். ராஷ்மிகாவின் பதிவைப் பார்த்தால் அவர் நிதின் படத்திலிருந்து விலகியதாக செய்திகள் வந்தது வதந்தியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !