நண்பர்களுடன் லண்டன் ஜாலி ட்ரிப்பில் மஞ்சு வாரியர்
ADDED : 815 days ago
நடிகை மஞ்சு வாரியர் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்த வருடம் அவரது நடிப்பில் துணிவு, ஆயிஷா மற்றும் வெள்ளரி பட்டணம் ஆகிய படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. அடுத்து நடிக்க வேண்டிய படங்களையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் மஞ்சு வாரியர். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகளுக்கு பை சொல்லிவிட்டு ஜாலியாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் மஞ்சு வாரியர்.
இவருடன் பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், அவரது மனைவி பிரியா மற்றும் நடிகரும், இயக்குனருமான ரமேஷ் பிஷரோடி ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர். புகழ்பெற்ற ஒரு லாவண்டர் மலர் தோட்டத்திற்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் அங்கு நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.