மோகன்லால் மகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் மகன்
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் அடுத்ததாக தெலுங்கில் தயாரிக்க உள்ள படம் விருஷபா. மோகன்லால் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல கன்னட இயக்குனர் நந்தா கிஷோர் இயக்க உள்ளார். இந்த படத்தில் மோகன்லால் மகனாக நடிக்கும் இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் உள்ளது. இதில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்கிற யூகம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ரோஷன் மேகா நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ரோஷன் தெலுங்கில் பிரபல நடிகரான மேகா ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மூத்த மகன் ஆவார். இவரை அறிமுகப்படுத்துவதற்காக சரியான நேரத்திற்காக காத்திருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. மோகன்லாலின் படம் என்பதாலும் பான் இந்தியா படமாக உருவாவதாலும் ரோஷன் மேகாவுக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என தாராளமாக சொல்லலாம்.