ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு
ADDED : 822 days ago
கடந்த 2021ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் மாநாடு. இப்படம் சிம்புவுக்கு கம்பேக் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிப்பதாக தகவல் உள்ள நிலையில் தற்போது இதன் ஹிந்தி ரீமேக்கை நடிகர் ராணா டகுபதி கைப்பற்றியுள்ளாராம். இதில் நடிக்க பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் .