ஓடிடியில் வெளியாகும் அதர்வா, மணிகண்டன் படம்
ADDED : 868 days ago
கிடாரி பட இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ஜெய் பீம் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள படம் ‛மத்தகம்'. இதில் நிகிலா விமல், கவுதம் மேனன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளனர். திரையரங்கில் வெளியிட தயாரித்த இந்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தற்போது இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கிரைம் கலந்த திரில்லராக உருவாகி உள்ள இதில் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார்.