உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். அனிரூத் இசையமைக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, மிர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28ம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !