ஓய்விலிருந்து திரும்பிய ரஜினிகாந்த்
ADDED : 809 days ago
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 'ஜெயிலர், லால் சலாம்' ஆகிய படங்களில் நடித்து வந்தார். அவற்றின் படப்பிடிப்பு முடிந்த பின் ஓய்வெடுக்க விரும்பி மாலத் தீவிற்கு கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சென்றார். அங்கு அவர் கடற்கரையில் கடந்த புகைப்படம் கூட சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பத்து நாட்களுக்கும் மேலாக அங்கு ஓய்வெடுத்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். நாளை ஜுலை 28ம் தேதி அவர் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்துள்ளார்.
ரஜினிகாந்த் மாலத் தீவிலிருந்து சென்னைக்குத் தங்களது விமானத்தில் திரும்பியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.