உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜெயிலர்' படத்தில் சிவராஜ் குமார் 11 நிமிடம் தான் வருவாரா?

‛ஜெயிலர்' படத்தில் சிவராஜ் குமார் 11 நிமிடம் தான் வருவாரா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள திரைப்படம் ' ஜெயிலர்'. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சுனில், யோகிபாபு, மிர்ணா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆக., 10ம் தேதி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதி நெருங்குவதால் யு-டியூப்பில் புரொமோஷனுக்காக பேட்டி அளித்துள்ளார் சிவராஜ்குமார். அதில் அவர் கூறியதாவது, ரஜினி சாரின் ஸ்டைல், வாக் எல்லாருக்கும் பிடிக்கும். ஜெயிலர் படத்தில் மொத்தமாக 11 நிமிட காட்சிகள் மட்டுமே வருவேன். ஒரு முக்கிய காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியிலும் வருவேன் என தெரிவித்துள்ளார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !