உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜெயிலர்' : அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?

‛ஜெயிலர்' : அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அதிகாலை காட்சியை திரையிடுவதற்கு தமிழகத்தில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் கர்நாடக மாநிலத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதால், அங்கு காலை 6 மணிக்கே ஜெயிலர் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் அதிகாலை முதல் காட்சி திரையிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஜெயிலர் படக்குழு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !