உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.வி.பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர் படப்பிடிப்பு நிறைவடைந்தது

ஜி.வி.பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர் படப்பிடிப்பு நிறைவடைந்தது

ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'டியர்'. இந்த படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், இளவரசு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !