அதர்வா நடித்த 'மத்தகம்' வெப் சீரிஸ் : 18ம் தேதி வெளியாகிறது
ADDED : 805 days ago
அதர்வா நடித்துள்ள வெப் சீரிஸ் 'மத்தகம்'. அவருடன் மணிகண்டன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி நடித்துள்ளனர். இதில் மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார். அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். தமிழில் தயாராகி உள்ள இந்த வெப் சீரிஸ் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய 7 மொழிகளில் வெளியாகிறது.
இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 18ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.