தமிழில் உருவாகும் புதிய மல்டி ஸ்டாரர் வெப் தொடர்
ADDED : 798 days ago
பல ஓடிடி நிறுவனங்கள் தமிழில் வெப் தொடரை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது தமிழில் ஒரு புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இதை ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஸ்ரீதர் இயக்கத்தில் கிருஷ்ணா, ஷாம், கனி திரு, டெல்லி கணேஷ், கிஷோர் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடிக்கின்றனர். இந்த தொடருக்கு ' ‛பாராஷூட்' என தலைப்பு வைத்துள்ளனர். குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கவரும் வகையில் இந்த வெப் தொடர் உருவாகிறது என்கிறார்கள்.