நண்பன் ஒருவன் வந்த பிறகு பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிம்பு
ADDED : 798 days ago
மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார் .
கடந்த வாரத்தில் நண்பர்கள் தின வாரத்தை முன்னிட்டு நண்பர்கள் சம்மந்தப்பட்ட பட போஸ்டர்களை ரீ- கிரியேட் செய்து வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, நடிகர் சிலம்பரசன் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.