தமன்னாவுக்கு டப் கொடுத்து ஆட்டம் போட்ட நித்ய ஸ்ரீ! வைரல் வீடியோ
ADDED : 801 days ago
சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேடை பாட்டு, வெளிநாட்டு கச்சேரிகள் என பிசியாக இருக்கும் அவர் மாடலிங்கிலும் இறங்கி பலவிதமான போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். தவிர சினிமாவிலும் ஏற்கனவே எp்ட்ரி கொடுத்து நடித்துள்ளதால், விரைவில் ஹீரோயினாகிவிடுவார் என்று கூட ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடலுக்கு நடிகை தமன்னாவுடன் சேர்ந்து நித்யஸ்ரீ அசத்தலாக நடனமாடியுள்ளார். அந்த வீடியோவில் நித்யஸ்ரீ தமன்னாவுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கச்சிதமாக நடன அசைவுகளை காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக, பலரும் நித்ய ஸ்ரீக்கு ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.