உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 68வது படப்பிடிப்பு எப்போது?

விஜய் 68வது படப்பிடிப்பு எப்போது?

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !